குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி 26ம் தேதி சென்னை வருகை

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இம்மாதம் 26-ந் தேதி புதுச்சேரி  ஜிப்மர் மருத்துவமனை விழாவில் கலந்து கொள்கிறார்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி 26ம் தேதி சென்னை வருகை
Published on
Updated on
1 min read

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இம்மாதம் 26-ந் தேதி புதுச்சேரி  ஜிப்மர் மருத்துவமனை விழாவில் கலந்து கொள்கிறார்.

இந்த விழாவில் கலந்து கொள்ள வரும் அவர் தில்லியில் இருந்து விமானப்படை விமானத்தில் 26-ந் தேதி காலை 11 மணிக்கு  புறப்பட்டு பகல் 1.30 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்து சேருகிறார். பின்னர் சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரிக்கு செல்கிறார்.  குடியரசுத் தலைவர் வருகையையொட்டி சென்னை விமான நிலையத்தில் 26-ந் தேதி இரவு வரை 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை நேற்று தில்லி சிறப்பு படையினர் சென்னை வந்து பார்வையிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com