2008ம் ஆண்டு கோவையில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜிம் ஹக்கீமுக்கு ஆயுள் தண்டனை வித்தித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கார்த்திகேயன், பிரகாஷ், முகமது அனீஷ், ஷாஜ்கிங்ஸ்லிக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு இழப்பீடாக ரூ.1 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.