பாலிவுட் நடிகர் சசி கபூர் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று பிரார்த்திப்பதாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் கூறியுள்ளார்.
அமிதாப்புடன் தீவார் படத்தில் இணைந்து நடித்தவர் சசி கபூர். மேலும் திரிசூல், சில்சிலா, கபி கபி, நமக் ஹலால் உள்ளிட்ட படங்களிலும் சேர்ந்து நடித்துள்ளார். இந்நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில், அமிதாப் (71), சசிகபூர் விரைவில் நலம்பெற பிரார்த்திப்பதாகக் கூறியுள்ளார்.
சசிகபூர் (76) செப்டம்பர் 21ம் தேதி கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனியில் மூச்சுத்திணறல் கோளாறு காரணமாக சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.