உத்தரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் சாலையோரம் உள்ள கடை மீது டிரக் மோதியதில் அதில் பயணித்த 11 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.இந்த விபத்து புதுதில்லி- மதுரா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கோசி கலன் என்ற இடத்தில் நிகழ்ந்தது. சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அந்த இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர்களின் உடல்களை அரசுமருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.