சீனாவின் மேற்கு பகுதியில் உள்ள ஸின்ஷியாங் மாகாணத்தின் லுண்டாஸ் நகரில் நேற்று மாலை 3 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன.
இச்சம்பவத்தில் 2 பேர் பலியாகினர். பலர் படுகாயம் அடைந்தனர். இந்த குண்டு வெடிப்புக்கான காரணம் குறித்து இன்னும் அறியப்படவில்லை. மேலும் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஸின்ஜியாங் மாகாணத்தில் உகியார் பகுதியில் உள்ள இஸ்லாமிய தீவிரவாதிகள் அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு அவர்களுக்கும் தொடர்ப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.