தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
காற்றின் மேலடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை நீடிக்கும். ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.