பிரதமர் நரேந்திர மோடி வரும் செப்டம்பர் 26 முதல் 30 வரை 5 நாட்கள் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின்போது வரும் 27 ஆம் தேதி காலை நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் உரையாற்றுவார் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் அன்றே 911 தாக்குதலி உயிரிழந்தவர்களின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்துவார் என்றும் தெரிவித்துள்ளது.
வரும் செப்டம்பர் 30ம் தேதியன்று முன்னாள் அதிபர் பில் கிளின்டன் மற்றும் ஹிலாரி கிளிண்டனை சந்திக்கிறார். அதே நாளில் அமெரிக்க துணை அதிபர் ஜோ ஜூபிடனை சந்திக்கிறார்.
பிரதமரான பின் அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு மோடி செல்கிறார். இந்நிலையில் மோடியை வரவேற்க அங்குள்ள இந்தியர்கள் சார்பில் பிரம்மாண்ட ஏற்பாடு நடக்கிறது.
செப்டம்பர் 28ம் தேதி நியூயார்க் மாடிசன் ஸ்கொயர் அரங்கில் அவர் உரை நிகழ்த்துகிறர். இதற்கான அனைத்து இருக்கைகளும் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டு விட்டன. அந்த அரங்கில் 20 ஆயிரம் பேர் அமர முடியும். ஆனால் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் அவருடைய உரையைக் கேட்க விருப்பம் தெரிவித்துள்ளதால், மோடியின் உரையை நியூயார்க் டைம்ஸ் ஸ்கொயரில் உள்ள பிரமாண்ட திரைகளில், நேரடியாக ஒளிபரப்ப முடிவு செய்துள்ளனர்.