மகள் உடல் கருகி சாவு: காதலனிடம் விசாரிக்க கோரி தந்தை போலீஸில் புகார்

பல்லாவரத்தை அருகே தனது பெண்ணின் சாவில் மர்மம் இருப்பதாகவும்,  இதுகுறித்து காதலனிடம் விசாரிக்க வேண்டும் என்றும் இளம் பெண்ணின்
Published on
Updated on
1 min read

பல்லாவரத்தை அருகே தனது பெண்ணின் சாவில் மர்மம் இருப்பதாகவும்,  இதுகுறித்து காதலனிடம் விசாரிக்க வேண்டும் என்றும் இளம் பெண்ணின் தந்தை ஒருவர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

பல்லாவரத்தையடுத்த. பொழிச்சலூரை சேர்ந்தவர் குமார். அவருக்கு 3 மகள்கள் உள்ளனர். அவரது 3 வது மகள் பெயர் ரேகா வயது 25.  இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.  கடந்த 16–ந்தேதி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த ரேகா திடீரென உடல் கருகி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.அருகில் உள்ளவர்கள் அவரை  கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்திய போது சமையல் செய்த போது ஸ்டவ் வெடித்ததில் உயிரிழந்தாக கூறப்பட்டது. இந்நிலையில் உயிரிழந்த ரேகாவின் தந்தை  குமார், போலீஸில புகார்அளித்துள்ளார். அதில் தனது மகள் சாவில் சந்தேகம் இருபபதாக கூறிப்பிட்டுள்ளார்.

ரேகா ஒரு வாலிபரை காதலித்ததாகவும், சம்பவம் நடப்பதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு அந்த வாலிபர் வீட்டுக்குள் சென்றுள்ளதாகவும். இதை பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் பார்த்துள்ளதாகவும், தனது மனுவில் குறிப்பிட்டுள்ள அவர், எனவே தனது மகள் மரணம் தற்செயலாக நிகழவில்லை. அவரது காதலன் மீது சந்தேகம் உள்ளதாக கூறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com