மகராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜக - சிவசேனா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பான உடன்பாடு எட்டப்பட்டதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிவ சேனாக் கட்சித் தலைவர்கள் இன்று பாஜக அலுவலகத்துக்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, பாஜக 130 தொகுதிகளிலும், சிவ சேனா 151 தொகுதிகளிலும் போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த தொகுதி உடன்பாடுக்கு இரு கட்சிகளும் ஒத்துக் கொண்டதாகவும், இதனால் சிறிய கட்சிகளுக்கு மிகக் குறைந்த தொகுதிகளே கிடைக்கும் என்பதால், அவற்றை சமாதானம் செய்ய வேண்டிய பொறுப்பு இவ்விரு கட்சிகளையே சாரும் என்றும் செய்திகள் கசிந்துள்ளன.