மயூர் விஹார் மூன்றாவது ஃபேஸில் அமைந்துள்ள ஸ்ரீ இஷ்ட சித்தி விநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் 25-ஆம் தேதி முதல் அக்டோபர் 3-ஆம் தேதி வரை நவராத்திரி விழா நடைபெறுகிறது.
இதையொட்டி, தினமும் காலை 9 மணிக்கு தேவி துர்கைக்கு சிறப்பு அபிஷேகம், மாலை 6 மணிக்கு லலிதா சஹஸ்ரநாம லட்சார்ச்சனை, இரவு 8 மணிக்கு லலிதா சஹஸ்ரநாமப் பாராயணம் நடைபெறும்.
செப்டம்பர் 28-ஆம் தேதி காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், காலை 9. 30 மணிக்கு ஷிர் சுக்தா ஹோமம், காலை 11.45 மணிக்கு பூர்ணாஹுதி, நண்பகல் 12 மணிக்கு தேவி துர்கைக்கு சிறப்பு அலங்காரம், அதைத் தொடர்ந்து தீபாராதனை நடைபெறும்.
விழா நாள்களில் தினமும் மாலை மணிக்கு அம்மன் அபிராமி அம்மன், மீனாட்சி அம்மன், அன்னபூர்னேஸ்வரி, சாகம்பரி அம்மன், சாரதாம்பாள், தேவி காமாட்சி அம்மன், ஸ்ரீ மகாலட்சுமி, சரஸ்வதி, மஹிஷாசுரமர்த்தனி உள்ளிட்ட அலங்காரங்களில் அருள்பாலிப்பாள். விழா ஏற்பாடுகளை ஸ்ரீ ஆதி சங்கர சேவா சமாஜத்தினர் செய்து வருகின்றனர்.