முன்னாள் அமைச்சர் அஜித் சிங் குடியிருக்கும் அரசு பங்களாவை முன்னாள் பிரதமர் சரண் சிங் நினைவிடமாக மாற்ற வலியுறுத்தி ராஷ்ட்ரிய லோக் தள தொண்டர்கள் நடத்தி வரும் போராட்டம் காரணமாக பிரதமர் இல்லத்துக்குச் செல்லும் சாலையும், தில்லி ரேஸ் கோர்ஸ் மெட்ரோ ரயில் நிலையமும் மூடப்பட்டது.
மத்திய விளையாட்டுத் துறை அமைச்சராக உள்ள சபரானந்த சோன்வாலுக்கு, அஜித் சிங் குடியிருக்கும் அரசு பங்களா ஒதுக்கப்பட்டுள்ளது. அஜித் சிங்கை வீட்டை காலி செய்யுமாறு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வீட்டுக்கு மின் இணைப்பு மற்றும் தண்ணீர் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.