சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த கல்பகனூர் தபால் அலுவலகத்தில் சுமார் ரூ.60 லட்சத்தை முறைகேடு செய்த தபால் நிலைய ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தபால் அலுவலகத்தில் கணக்கு வைத்திருந்தவர்களின் பணத்தை திருப்பிக் கொடுக்காமல், ரூ.60 லட்சம் அளவுக்கு முறைகேடு செய்திருப்பதாக புகார் வந்தது.
புகாரினை விசாரித்ததில், தபால் ஊழியர் சங்கரநாராயணன்(50) இந்த முறைகேட்டில் ஈடுபட்டது உறுதி படுத்தப்பட்டதால், அவரை பணியிடை நீக்கம் செய்து தலைமை அஞ்சலக ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.