இந்தியாவில் முக்கியப் பிரமுகர்களுக்கான பயன்பாட்டுக்காக இத்தாலி நிறுவனத்திடம் இருந்து ஹெலிகாப்டர்கள் வாங்கியதில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரித்து வரும் சிபிஐ, தொழிலதிபர் கௌதம் கெய்தானை கைதுசெய்துள்ளது.
விவிஐபி ஹெலிகாப்டர்கள் முறைகேட்டில் கௌதம் கெய்தானுக்கும் தொடர்பிருப்பதாக விசாரணையில் தெரிய வந்ததை அடுத்து, அவர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.