Enable Javscript for better performance
10 வயது சிறுமியை நிர்வாணப்படுத்தி படம் பிடித்த தேவாலய பாதிரியாருக்கு வலை வீச்சு- Dinamani

சுடச்சுட

    

    10 வயது சிறுமியை நிர்வாணப்படுத்தி படம் பிடித்த தேவாலய பாதிரியாருக்கு வலை வீச்சு

    By dn  |   Published on : 25th April 2014 04:45 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பத்து வயது சிறுமியை நிர்வாணப்படுத்தி புகைப்படம் எடுத்த கேரள தேவாலய பாதிரியாரை போலீஸார் தேடி வருகின்றனர்.

    கேரள மாநிலம் திருச்சூர் கத்தோலிக்க மறைமாவட்டத்துக்கு உட்பட்ட தளிக்கட்டுச்சேரியிலுள்ள புதினி பவுல் தேவாலயத்தில் பாதிரியாக இருப்பவர் ராஜு கொக்கன் (44). இந்த இரு தினங்களுக்கு முன்பு தேவாலயத்துக்கு வழக்கமாக வரும் குடும்பத்தை சேர்ந்த 10 வயது சிறுமியை நிர்வாணப்படுத்தி தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். இதனால் அதிர்ச்சிடைந்த சிறுமி தனது பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார். இதையடுத்து பாதிரியார் மீது சிறுமியின் பெற்றோர் திருச்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின்பேரில் போலீஸார் பாதிரியார் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்துள்ளனர்.புகார் பற்றிய தகவலறிந்ததும் பாதிரியார் தலைமறைவாகிவிட்டார். போலீஸார் அவரை தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai