சுடச்சுட

    
    vijay

    இயக்குனர் விஜய் நடிகை அமலாபாலும் நீண்ட நாட்களாகவே காதலித்து வந்தனர். சமீபத்தில் நடத்த சைவம் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட பார்த்திபன் இவர்களது காதலை போட்டு உடைத்தார். அதன்பின் அமலாபால் எங்கள் திருமணம் குறித்து இருவரும் முறைப்படி தெரிவிப்போம் என்று அறிவித்தார்.

    இதனை தொடர்ந்து இயக்குனர் விஜய் நேற்று முந்தினம் அமலாபாலுடனான திருமணம் குறித்து அறிவித்தார். இருவருக்கும் ஜூன் 12–ம் தேதி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் மஹாலில் திருமணம் நடக்க உள்ளது. விஜய் இந்து மதத்தைச் சேர்ந்தவர். அமலாபால் கிறிஸ்தவ மதம். திருமணத்துக்கு முன்பு கிறிஸ்தவ மதத்துக்கு மாறி விடும்படி விஜய்யை அமலாபாலும் அவரது பெற்றோரும் வற்புறுத்துவதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால் விஜய்க்கு மதம் மாற விருப்பம் இல்லை என்று கூறப்பட்டது. இந்நிலையில் இது குறீத்து விஜய் இன்று விளக்கம் அளித்தார். இது குறித்து அவர் கூறுகையில்,

    அமலா பாலுக்காக நான் மதம் மாறுவதாக வந்த செய்திகளில் உண்மையில்லை என்றும், இந்த செய்தி ஆதாரமற்றது என்றும், என்னை மதம் மாறும்படி யாரும் கட்டாயப்படுத்தவுமில்லை, அப்படி மாறும் எண்ணமும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai