Enable Javscript for better performance
பாலியல் தொல்லை: மண்டல குழு தலைவரை கண்டித்து அம்மா உணவக பெண் ஊழியர்கள் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பாலியல் தொல்லை: மண்டல குழு தலைவரை கண்டித்து அம்மா உணவக பெண் ஊழியர்கள் போராட்டம்

    By dn  |   Published on : 02nd December 2014 04:09 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சென்னை மாநகராட்சி 155–வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் சேகர் 11–வது மண்டல குழு தலைவராகவும் உள்ளார். இந்த மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் ஆழ்வார் திருநகர், ராமாபுரம், காரப்பாக்கம் ஆகிய மூன்று இடங்களில் அம்மா உணவகம்  அமைந்துள்ளது.

    இங்கு பணியாற்றும் பெண்களிடம் சேகர் பாலியல் தொல்லை கொடுப்பதாக பெண்கள் புகார் தெரிவித்தனர். புகார்கள் தெரிவிக்கப்பட்டும் சேகரின் நடவடிக்கைகள் மாறவில்லையாம். இதனால் ஆவேசம் அடைந்த அம்மா உணவகத்தில் பணியாற்றும் பெண்கள் சுமார் 30க்கும் மேற்பட்டோர் இன்று காலை சேகரை கண்டித்து வளசரவாக்கத்தில் உள்ள மண்டல குழு அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து அம்மா உணவகம் பெண் ஊழியர் ஒருவர் கூறியபோது, தலைவர் சேகர் அம்மா உணவகத்தில் பணியாற்றும் பெண்களை அலுவலகத்திற்கு வர சொல்லியும், மோசமான வார்த்தைகளால் பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். அவரது எண்ணத்திற்கு உடன்பாடாத பெண்களை சரியாக வேலை செய்யவில்லை என்றும், வேலையிலிருந்து நீக்கி விடுவேன் என்றும் மிரட்டல் விடுத்தார். மேலும் யாரிடம் புகார் செய்தாலும் என்னை ஒன்றும் செய்யமுடியாது என்று மேலும் மிரட்ட தொடங்கினார். இதனால் நாங்கள் அவருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்று தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai