சென்னையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்ட இயக்குநர் கே.பாலச்சந்தர் செவ்வாய்க்கிழமை இரவு 07.05 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இயக்குநர் கே.பாலச்சந்தர் மறைவையொட்டி, தமிழ் திரையுலக படப்பிடிப்புகள் அனைத்தும் புதன்கிழமை ஒருநாள் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுவதாக இயக்குநர் விக்ரமன் அறிவித்துள்ளார்.