Enable Javscript for better performance
எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத்துக்கு அடிக்கல் நாட்டினார் ஜெயலலிதா- Dinamani

சுடச்சுட

    

    எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத்துக்கு அடிக்கல் நாட்டினார் ஜெயலலிதா

    By dn  |   Published on : 27th February 2014 02:39 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று  (27.2.2014)  தலைமைச் செயலகத்தில்,  திருவள்ளூர் மாவட்டம், எண்ணூரில் மாநிலத்தில் முதன்முறையாக 4956 கோடி ரூபாய்  மொத்த மதிப்பீட்டிலான 660 மெகாவாட்  திறன் கொண்ட எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்க மிக உய்ய அனல் மின்  திட்டப் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

    தமிழக முதல்வர் ஜெயலலிதா, 29.3.2012 அன்று சட்டமன்றப் பேரவையில், 660 மெகாவாட்  திறன் கொண்ட எண்ணூர் அனல் மின் விரிவாக்கத்  திட்டம் என்னும் ஒரு புதிய  திட்டம் செயல்படுத்தப்படும் என்றும்,  இந்த அனல் மின்  திட்டம்,  Super Critical என்னும் தொழில்நுட்பத்துடன் கூடியதாக இருக்கும் என்றும், இதன் மூலம், குறைந்த அளவு நிலக்கரியில் அதிக அளவு மின் உற்பத்தியைப்  பெற இயலும் என்றும் அறிவித்திருந்தார்.

    அதன்படி,  திருவள்ளூர் மாவட்டம், எண்ணூரில் 4956 கோடி ரூபாய் மொத்த மதிப்பீட்டிலான 660 மெகாவாட்  திறன் கொண்ட எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்க மிக உய்ய அனல் மின் திட்டப் பணிக்கு தமிழக அரசின் அனுமதி  30.03.2012 அன்று வழங்கப்பட்டது. மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியோடு  பிற அனுமதிகளும் பெறப்பட்ட பின்  இந்தத் திட்டத்தை நிறுவுவதற்கான சர்வதேச ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு இறுதி செய்யப்பட்டது.

    இந்த ஒப்பந்தப் புள்ளியில் ஹரியானா மாநிலம், குர்கானில் அமைந்துள்ள லான்கோ  இன்ப்ரா  டெக்   நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது.  இந்த அனல் மின்  திட்டமானது, தமிழ்நாட்டில் நிறுவப்படும் முதல் மிக உய்ய அனல் மின்  திட்டமாகும்

    திருவள்ளூர் மாவட்டம், எண்ணூரில் மாநிலத்தில் முதன்முறையாக 4956 கோடி ரூபாய் மொத்த  மதிப்பீட்டிலான 660 மெகாவாட்  திறன் கொண்ட எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்க மிக உய்ய அனல் மின்  திட்டப் பணிக்கு ஜெயலலிதா இன்று அடிக்கல் நாட்டினார்.

    மேலும், இந்த  திட்டத்தின் மிக முக்கிய அம்சமாகிய அனல் மின் நிலையத்தை 3,961 கோடி ரூபாய் செலவில் நிறுவுவதற்கான பணி ஆணையினை லான்கோ  இன்ப்ரா  டெக் நிறுவனத்தின் செயல் தலைவர்  எல். மதுசூதன் ராவ்விடம் ஜெயலலிதா இன்று வழங்கினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai