இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரின் உடல் அடக்கம்

தஞ்சாவூரில் கடந்த திங்கட்கிழமை இரவு இயற்கை எய்திய இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் உடல் அடக்கம் இன்று காலை நடந்தது. அவரது உடல் அடக்கம் இயற்கை முறையில் அதாவது பள்ளிப்படை என்ற முறையில் நடைபெற இருந்தது. ஆனால், அதற்கு அவரது குடும்பத்தாரும், இயற்கை ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த முறை கைவிடப்பட்டு, சாதாரண முறையில் உடல் நல்லடக்கம் நடைபெற்றது.

கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியத்தில் வானகம் என்ற இடத்தில் உள்ள அவரது கனவு பல்கலைக்கழக வளாகத்திலேயே நம்மாழ்வாரின் உடல் அடக்கம் நடைபெற்றது.

நம்மாழ்வாரின் உடல் புதைக்கப்பட்ட இடத்தில், முதலில் திருநீரு, உப்பு, மிளகு, சங்குக்காய், ஜடாமஞ்ஜி, வெட்டிவேர், சுக்கு, திப்பிலி, பஞ்சகவ்யம், நவதானியம், வில்வ இலைகள், துளசி இலைகள், தர்பைப் புல் ஆகியவை அடுக்கப்பட்டது. அதன் மீது நம்மாழ்வாரின் உடல் வைக்கப்பட்டு, மீண்டும் மேற்கூறிய பொருட்கள் அவரது உடல் மீது அடுக்கப்பட ஏற்பாடுகள் நடந்தன. இம்முறையை பள்ளிப்படை முறை என்று அழைக்கிறார்கள்.

இந்த முறையில் உப்பு, மிளகு போடுவதால் நம்மாழ்வாரின் உடல் பதப்படுத்தப்படும். அவரது உடல் மக்காது. ஆனால் இந்த முறைக்கு அவரது உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஐயா அவர்கள் இயற்கையோடு வாழ்ந்தவர். மண்ணோடு மண்ணாக வேண்டும் என்பதே அவரது கொள்கை. எனவே, அவரது உடலை மண்ணோடு மண்ணாக இயற்கையோடு ஒன்ற வேண்டும் என்று விரும்பினர். அதற்கு அடக்கத்துக்கு ஏற்பாடு செய்திருந்தவர்களும் ஒப்புக் கொண்டனர்.

இதையடுத்து, குழியில் போடப்பட்டிருந்த மருத்துவ பொருட்களை அனைத்தும் எடுக்கப்பட்டது. திருநீறு மட்டும் போடப்பட்டு, அவரது உடல் வைக்கப்பட்டது. இறுதிச் சடங்குக்கு வந்த அனைவரும் ஒரு கைப்பிடி மணல் போட்டு தங்களது அஞ்சலியை செலுத்தினர். இயற்கைக்காக வாழ்ந்த நம்மாழ்வாழ்வாரின் இறுதிச் சடங்குகள் நடந்து முடிந்தன.

நம்மாழ்வாரின் இறுதிச் சடங்கில் சீமான், தமிழ் தேச பொதுவுடைமைக் கட்சித் தலைவர் மணியரசன், எம்எல்ஏ உ. தனியரசு, நடிகை ரோகிணி,  தமிழ்நாடு முழுவதும் உள்ள இயற்கை விவசாயம், இயற்கை விஞ்ஞானிகள், இயற்கை மருத்தவர்கள், ஈஷா யோகா அமைப்பினர், விவசாய சங்கப் பிரதிநிதிகள் உட்பட 2000 முதல் 3000 பேர் வரை திரண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com