இன்று தேசிய வாக்காளர் தினம்: தேர்தல் குறித்த புகார்கள்-தகவல்களுக்கு தனி ஃபேஸ்புக் திறப்பு

மக்களவைத் தேர்தல் தொடர்பான புகார்கள் மற்றும் கருத்துகளைத்  தெரிவிக்க தனியாக ஃபேஸ்புக் பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதனை தலைமைச் செயலகத்தில் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.

மக்களவைத் தேர்தல் தொடர்பான புகார்கள் மற்றும் கருத்துகளைத்  தெரிவிக்க தனியாக ஃபேஸ்புக் பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதனை தலைமைச் செயலகத்தில் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.

இதன்பின், செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

தேசிய வாக்காளர் தினம் நாடு முழுவதும் சனிக்கிழமை (ஜன. 25) கொண்டாடப்படுகிறது. வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளின் போது, புதிதாக பெயர்களைச் சேர்க்க விண்ணப்பத்திருந்தவர்களில் 27 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு தேசிய வாக்காளர் தினத்தில் இருந்து புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்படும். தமிழகத்திலுள்ள 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட உள்ளது.

     ஃபேஸ்புக் பக்கம்: ஒவ்வொரு ஆண்டும் தேசிய வாக்காளர் தினத்தின் போதும் வாக்களிப்பின் அவசியத்தை முன்னிறுத்தும் வாசகங்கள் வெளியிடப்படும். அதேபோன்று, இந்த ஆண்டு கண்ணியமாக வாக்களியுங்கள் என்ற வாசகம் முன்வைக்கப்படுகிறது. மேலும், வாக்களிப்பதற்காக பணம் வாங்கக் கூடாது என்பது போன்ற கருத்துகள் மக்களவைத் தேர்தல் முடியும் வரை வாக்காளர்களிடம் வலியுறுத்தப்படும்.

    கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என்பதை ஃபேஸ்புக் மூலமும் பிரசாரம் செய்யப்படுகிறது. இதற்கென பிரத்யேக ஃபேஸ்புக் பக்கம் (www.facebook.com/tnelection2014) தொடங்கப்பட்டுள்ளது. பணம் பெற்றுக் கொண்டு வாக்களிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். அவ்வாறு செய்தால் ஓராண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரித்தார் பிரவீண் குமார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com