தேர்தல் நெருங்குகிறது: வரும் ஞாயிறு முதல் மும்பையில் மோனோ ரயில்

 இந்தியாவில் முதல்முறையாக மும்பையில் வரும் சனிக்கிழமை  மோனோ ரயில் திறப்புவிழா நடைபெறுகிறது..
தேர்தல் நெருங்குகிறது: வரும் ஞாயிறு முதல் மும்பையில் மோனோ ரயில்

 இந்தியாவில் முதல்முறையாக மும்பையில் வரும் சனிக்கிழமை  மோனோ ரயில் திறப்புவிழா நடைபெறுகிறது.. மறுநாள் ஞாயிறு முதல் மோனோ ரயிலில்  பொதுமக்கள் பயணம் செய்யலாம்

மோனோரயில்  வடாலா- செம்பூர்இடையே முதற்கட்டமாக இயக்கப்படுறது.

மொத்தம் 8,93 கிலோமீட்டர் நீளமுள்ள பாதையில் 6 ரயில்நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது,

இந்த மோனோ ரயில் செம்பூரில் இருந்து முக்கிய உள்ளூர் ரயில்நிலையங்களை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

 காலை 7 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை ஒவ்வொரு 15 நிமிடத்திற்கு ஒருமுறை ரயில் இயக்கப்படுகிறது.

அனைத்து ரயிலும் முற்றிலும் குளிரூட்டப்பட்ட பெட்டிகளை கொண்டவையாகும். ஒவ்வொரு ரயிலிலும் 560பேர்வரை பயணம் செய்ய முடியும்.

டிக்கெட் கட்டணம் ரூ.5முதல் அதிகபட்சமாக ரூ11 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் சீசன் பாஸ் கிடையாது. அதேநேரத்தில் ஸ்மார்ட்கார்டு திட்டம் அமல்படுத்தப்படுகிறது.

 இந்த ரயில் திட்டம் கடந்த 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு (2014 இல்) தற்போது நிறைவடைந்துள்ளது.

 இந்த ரயில் மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில்இயங்கும் என்றும் சராசரியாக 65கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com