சுடச்சுட

  
  lollu saba balaji

  காமெடி நடிகர் பாலாஜி இன்று காலை திடீர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 43. பிரபல தனியார் தொலைக்காட்சியில் லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பாலாஜி. இவரை லொள்ளு சபா பாலாஜி என்றும் அழைத்தனர். டி.வி.யில் சூப்பர் டென் நிகழ்ச்சியிலும் வந்தார். காமெடி நடிகர் சந்தானத்தை டி.வியில் அறிமுகப்படுத்தியவர் இவர். சிலம்பாட்டம், திண்டுக்கல் சாராதி உள்பட 50–க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

  சிவா நடித்த தில்லு முல்லு படத்துக்கு காமெடி வசனம் இவர் தான் எழுதினார். இவர் அனகாபுத்தூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். பாலாஜிக்கு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை அவரது உடல் நிலை மோசமானது. உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி காலை 8 மணிக்கு மரணம் அடைந்தார். பாலாஜிக்கு மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai