சுடச்சுட

    

    மகளை வைத்து ஆபாச காட்சிகள் எடுக்க முயன்றதாக நடிகையின் தாயார் புகார்

    By dn  |   Published on : 14th March 2014 07:28 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மகளை வைத்து ஆபாச காட்சிகள் எடுக்க முயன்றதாக பட அதிபர் மற்றும் இயக்குனர் மீது நடிகையின் தாயார் வளசரவாக்கம் போலீசில் பரபரப்பு புகார் கொடுத்து உள்ளார்.

    சென்னை விருகம்பாக்கத்தை அடுத்த சாலிகிராமம், காவேரி தெருவை சேர்ந்தவர் நிர்மலா. இவருடைய மகள் பாக்கியலட்சுமி என்ற பாக்யஸ்ரீ (18). இவர், சினிமாவில் துணை நடிகையாக நடித்து வருகிறார்.பாக்யஸ்ரீயின் தாயார் நிர்மலா, தனது மகளை படத்தில் நடிக்க வைப்பதாக அழைத்துச்சென்று ஆபாசமான காட்சிகளை எடுக்க முயன்றதாக தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மீது நேற்று வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்தார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    எனது மகள், ‘உயிருக்கு உயிராக’, ‘நாடோடி பறவை’ ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளார். இந்த 2 படங்களின் படப்பிடிப்பு முடிந்து விரைவில் வெளியாக உள்ளது.இந்நிலையில் ரவிதேவன் என்பவர் தயாரித்த படத்தில் எனது மகள் நடித்துவந்தார். கடந்த ஒரு வாரமாக இப்படத்தின் படப்பிடிப்பி வளசரவாக்கம், கோத்தாரி நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில்  இயக்குனர் ராமநாதன் படம் பிடித்தார்.

    இந்நிலையில் நேற்று  இரவு  நடந்த படப்பிடிப்பில் எனது மகள் கையில் தாம்பத்ய உறவு சம்பந்தமான மாத்திரைகள் அடங்கிய கவர்ச்சி படம் பொறித்த அட்டை பெட்டியை கொடுத்து படுக்கை அறைக்குள் செல்வது போல் படமாக்க முயன்றனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த நான் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தேன். இதனால் எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.எனவே இது சம்பந்தமாக படத்தயாரிப்பாளர், இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்து உள்ளேன். இதுபற்றி நடிகர் சங்கத்திலும் புகார் அளிக்க உள்ளேன்.

    இவ்வாறு நிர்மலா தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai