Enable Javscript for better performance
அருணாச்சல பிரதேச சட்டமன்றத்துக்கு 11 காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு - Dinamani

சுடச்சுட

    

    அருணாச்சல பிரதேச சட்டமன்றத்துக்கு 11 காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு

    Published on : 27th March 2014 10:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    congress1

    நாடுமுழுவது பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் பெயரை நமோ நமோ என உச்சரித்துக்கொண்டிருக்கும் வேளையில் 60 உறுப்பினர்கள் கொண்ட அருணாச்சலபிரதேச சட்டமன்றத்தில் 11 காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு அரசியல் வரலாற்றில் சாதனை படைத்துள்ளது.

    60 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மொத்தம் 188 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதில் 173 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 18 வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.  ஏப்ரல் 9ம் தேதி அங்கு சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது

    அங்கு  காங்கிரஸ் சார்பில் போட்டியிட 7 பெண்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் வெற்றி வாய்ப்பு அதிகமுள்ள பகுதிகளில் இருந்து 2 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்‘‘

    மாநில மந்திரிகள் பீம காண்டு, டங்கா பையலிங் உள்ளிட்ட 6 பேர் போட்டியிடும் தொகுதிகளில், எதிர்க்கட்சி சார்பில் யாரும் போட்டியிடவில்லை. ஆக 11 இடங்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டி இன்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai