Enable Javscript for better performance
ஆசிரியையிடம் செக் மோசடி: ரியல் எஸ்டேட் அதிபருக்கு ஓராண்டு சிறை- Dinamani

சுடச்சுட

    

    ஆசிரியையிடம் செக் மோசடி: ரியல் எஸ்டேட் அதிபருக்கு ஓராண்டு சிறை

    By K.Jeyakumar  |   Published on : 27th March 2014 06:41 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஸ்ரீவில்லிபுத்தூரில் தனியார் பள்ளி ஆசிரியையிடம் செக் மோசடி செய்த வழக்கில் ரியல் எஸ்டேட் அதிபருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள நீதித்துறை நடுவர் விரைவு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது

    .ஸ்ரீவில்லிபுத்தூர், தெற்கு ரத வீதியைச் சேர்ந்தவர் கலாவதி (48). தனியார் பள்ளி ஆசிரியை. இவரும் ஸ்ரீவில்லிபுத்தூர், மேல ரத வீதியைச் சேர்ந்த திருமலை மகன் பேச்சிமுத்து (30) என்பவரும் 8 ஆண்டுகள் குடும்ப நண்பர்கள். இவர் ரியல் எஸ்டேட் அதிபர். இந்நிலையில் ரியல் எஸ்டேட் தொழில் அபிவிருத்திக்காக 18.6.13-ம் தேதி பேச்சிமுத்து கலாவதியிடம் ரூ.7 லட்சம் கடனாக பெற்றுள்ளார்.

    பணத்தை ஒரு வாரத்தில் திரும்பத் தருவதாக உறுதியளித்துள்ளார். இதற்காக காசோலை கொடுத்துள்ளார். இக் காசோலையை 25.6.13-ம் தேதி கலாவதி வங்கியில் செலுத்திய போது பேச்சிமுத்து கணக்கில் போதிய பணம் இல்லாததால் காசோலை திரும்பியுள்ளது. இதனையடுத்து கலாவதி, ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் விரைவு நீதிமன்றத்தில் தனிநபர் வழக்குத் தொடர்ந்தார்.

     வழக்கை விசாரித்த நீதிபதி கே.மாரியப்பன், பேச்சிமுத்துவிற்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்துத் தீர்ப்புக் கூறினார்.மற்றொரு வழக்கு: ஸ்ரீவில்லிபுத்தூர், வாழைக்குளம் தெருவைச் சேர்ந்தவர் தனசேகரன் (29). இவரிடம் ராஜபாளையம், மேலராஜகுலராமன், திருக்கோதையாபுரம் காளிராஜ் (28) என்பவர் குடும்பச் செலவிற்காக 1.9.13-ம் தேதி ரூ.3.50 லட்சம் கடன் வாங்கியுள்ளார்.

    இதற்காக அவர் கொடுத்த காசோலையை 30.10.13-ம் தேதி தனசேகரன் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள வங்கியில் செலுத்தியுள்ளார். காளிராஜ் கணக்கில் போதிய பணம் இல்லாததால் காசோலை திரும்பியுள்ளது. இதனையடுத்து தனசேகரன், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் விரைவு நீதிமன்றத்தில் தனி நபர் வழக்குத் தொடர்ந்தார்.

     வழக்கை விசாரித்த நீதிபதி கே.மாரியப்பன், காளிராஜூக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீர்ப்புக் கூறினார்.மற்றொரு வழக்கு: ஸ்ரீவில்லிபுத்தூர், கம்மாப்பட்டி தெருவைச் சேர்ந்தவர் டிராவல்ஸ் அதிபர் ஜெயக்கண்ணன் (35). இவரிடம் திருக்கோதையாபுரம் காளிராஜ் (28), 1.9.13-ம் தேதி ரூ.3.50 லட்சம் கடனாக பெற்றுள்ளார்.

     இதற்காக அவர் கொடுத்த காசோலையை 1.10.13-ம் தேதி ஜெயக்கண்ணன், ஸ்ரீவில்லிபுத்தூர் வங்கியில் செலுத்தியுள்ளார். காளிராஜ் கணக்கில் போதிய பணம் இல்லாததால் காசோலை திரும்பியுள்ளது. இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் விரைவு நீதிமன்றத்தில் ஜெயக்கண்ணன் தனி நபர் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி கே.மாரியப்பன், காளிராஜுக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும் ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்துத் தீர்ப்புக் கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai