Enable Javscript for better performance
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இடைக்கால தலைவராக பதவி ஏற்க தயார்: கவாஸ்கர் அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இடைக்கால தலைவராக பதவி ஏற்க தயார்: கவாஸ்கர் அறிவிப்பு

    Published on : 27th March 2014 04:01 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    gavaskar

    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக பதவி ஏற்க தயார் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

     கிரிக்கெட் சூதாட்ட விவகாரத்தில் முகுல் முக்தல் குழு பரிந்துரையை குறித்து இன்று நடைபெற்ற விசாரணையில் உச்ச நீதிமனறம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

    அந்த உத்தரவில், நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இருந்து சென்னை மற்றும் ராஜஸ்தான் கிரிக்கெட் அணிகளை தற்காலிமாக நீக்க வேண்டும என்றும்,, இந்தியா சிமெண்ட் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் பிசிசிஐயில் இடம்பெறக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது. மேலும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இடைக்கால தலைவராக கவாஸ்கர் அல்லது மூத்த அனுபவம் வாய்ந்த வீரர் ஒருவரை நியமிக்கலாம் என்று  கூறியது.

     இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் கவாஸ்கர், உச்சநீதிமன்றத்தின் இறுதி உத்தரவு வரை பொறுமையாக இருப்போம். என்னைப் பொறுத்தவரை நான் ஒரு தொடக்க வீரர்.. எந்த ஒரு சவாலையும் ஏற்க நான் தயாரக இருக்கிறேன் என்றார். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து பிசிசிஐ தலைவர் சீனிவாசனுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai