Enable Javscript for better performance
இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை இந்தியா புறக்கணிக்கும்: இந்திய பிரதிநிதி- Dinamani

சுடச்சுட

    

    இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை இந்தியா புறக்கணிக்கும்: இந்திய பிரதிநிதி

    Published on : 27th March 2014 06:28 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    un metting

    இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானத்தை இந்தியா புறக்கணிப்பதாக இந்திய பிரதிநிதி  தெரிவித்துள்ளார்.

    இலங்கையில் கடந்த 2009 ஆண்டு போரில் நடந்த  மனித உரிமை மீறல்கள்  குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என ஜெனிவாலில் உள்ள மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா வரைவு தீர்மானத்தை கொண்டுவந்தது. இந்த தீர்மானம் குறித்து பல்வேற நாட்டு பிரதிநிதிகள் விவாதித்து வருகின்றனர். விவாத்தில் பேசிய இலங்கை பிரதிநிதி  

    இந்த தீர்மானம் இலங்கையின் இறையாண்மைக்கு எதிராகவுள்ளதாகவும். சர்வதேச விதிமுறைக்கு புறம்பானது என்றும் தெரிவித்தார்.  இந்திய பிரதிநிதி பேசுகையில்  தீர்மானம் மீதான வாக்கெடுப்பைப் இந்தியா புறக்கணிப்பதாக அறவித்தார்.

    மேலும் இது குறித்து பேசிய அவர், இலங்கை அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில் முன்னேற்றம் தேவை என்றும், இதற்கு மனித உரிமைகள் ஆணையம் தேவையான உதவிகள் செய்ய வேண்டும் என இந்தியா வலியுறுத்துகிறது. அமெரிக்க தீர்மானத்திற்கு ஆதரவு அளித்தால் இலங்கையில் இந்தியா மேற்கொண்டு வரும் வளர்ச்சிப்பணிகள் பாதிக்கப்படும் இவ்வாறு இந்திய பிரதிநிதி தெரிவித்தார்.

    ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கவுன்சில் கூட்டத்தொடர் இன்று தொட்ங்கி  வரும் 28ஆம் தேதி வரையில் நடக்கிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai