Enable Javscript for better performance
இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் 23 நாடுகள் ஆதரவுடன் நிறைவேறியது- Dinamani

சுடச்சுட

    

    இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் 23 நாடுகள் ஆதரவுடன் நிறைவேறியது

    Published on : 27th March 2014 06:54 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    un metting

    இலங்கையில் நடைபெற்ற  மனித உரிமைகள் மீறல் தொடர்பாக  ஜநா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம் 23 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேறியுள்ளது.

    இலங்கை மீதான தீர்மானத்திற்கு ஆதரவாக 23 நாடுகளும் எதிராக 12 நாடுகளும் வாக்களித்தன. இந்தியா, இந்தோனேசியா உட்பட 12 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன. இலங்கைக்கு ஆதரவாக தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்த பாகிஸ்தான், ஐநா மனித உரிமைகள் ஆணையத்திடம் போதுமான நிதிவளம் இல்லை என்று தெரிவித்ததுடன், தீர்மானம் நிறைவேற்றப்படுவதை தாமதப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியது.

    இதற்கு மறுத்துவிட்ட அமெரிக்கா, வாக்களிப்பின் மூலமே நாடுகள் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்த முடியும் என்று கூறியது. இதே போல் மற்ற நாடுகளும், ஐநா மனித உரிமைகள் ஆணையத்திடம் போதுமான நிதிவளம் இல்லை என்ற கருத்துக்கு எதர்ப்பு தெரிவித்து பேசின. இதனை தொடர்ந்து நடைபெற்ற வாக்கெடுப்பில் தீர்மானம் நிறைவேறியது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai