Enable Javscript for better performance
இலங்கை கடற்படை தாக்கியதில் 50க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் படுகாயம்: 30 விசைப்படகுகள் சேதம் - Dinamani

சுடச்சுட

    

    இலங்கை கடற்படை தாக்கியதில் 50க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் படுகாயம்: 30 விசைப்படகுகள் சேதம்

    By ஜெகஜோதி  |   Published on : 27th March 2014 09:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    fishermen in sea

    ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி விரட்டியதோடு மீனவர்களுக்கான 30 விசைபடகுகளையும் மீன்பிடிவலைகளையும் சேதப்படுத்தியுள்ளது. .

    இலங்கை கடற்படை முதலில் வானத்தை நோக்கியும் பிறகு படகுகளை நோக்கியும் சுட்டதாக ராமேஸவரத்தை சேர்ந்த மீனவர் ஒருவர் தெரிவித்தார். மேலும் அந்தோணி என்பவரை இலங்கை கடற்படையினர் கட்டையால் தாக்கியதில் தலையில் பலத்த காயம் அடைந்தார். அவருக்கு ராமேஸ்வரம் அரசு மருத்துவனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு  வருகிறது.

    50க்கும் மேற்பட்ட மீனவர்கள் காயம் அடைந்திருப்பதாக மீனவ வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai