Enable Javscript for better performance
எனது பொதுவாழ்விற்கு ஞானஸ்நானம் அளித்த தொகுதி, சிதம்பரம் தொகுதி: தொல்.திருமாவளவன்- Dinamani

சுடச்சுட

  

  எனது பொதுவாழ்விற்கு ஞானஸ்நானம் அளித்த தொகுதி, சிதம்பரம் தொகுதி: தொல்.திருமாவளவன்

  By சுந்தரராஜன்  |   Published on : 27th March 2014 03:22 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  unnamed

  பொதுவாழ்விற்கு ஞானஸ்நானம் அளித்த தொகுதி, சிதம்பரம் தொகுதி. அரசியல் அங்கீகாரம் மற்றும் அடையாளம் வழங்கியதும், தலைவனாக இந்திய தேசத்திற்கு அடையாளம் காட்டியத் தொகுதி சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி. எனவே வாக்காளர்களுக்கு வாழ்நாள் முழுவதும் நன்றி உடையவனாக இருப்பேன் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

  சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதி ஜனநாயக முற்போக்கு கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் சிதம்பரம் அருகே கடவாச்சேரி திடலில் புதன்கிழமை இரவு நடைபெற்றது. கூட்டத்தில் கடலூர் மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை வகித்துப் பேசினார். திமுக தேர்தல் பொறுப்பாளர் குத்தாலம் கல்யாணம், ஒன்றியச் செயலாளர்கள் ரா.மாமல்லன், முத்துப்பெருமாள், வி.என்.ஜெயராமன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் வ.க.செல்லப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுக நகரச் செயலாளர் கே.ஆர்.செந்தில்குமார் வரவேற்றார்.

  இக்கூட்டத்தில் கூட்டணி வேடாளரான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆதரவு கேட்டு பேசியது: 1991-ல் மூப்பனார் அணியுடன் சேர்ந்து சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு இரண்டேகால் லட்சம் வாக்குகள் பெற்று தோல்வியுற்றேன். மூப்பனாரால் அதிக வாக்குகள் பெற்றதாக கூறினார்கள். ஆனால் தமிழகம் முழுவதும் மூப்பனாரின் வேட்பாளர்கள் ஒரு லட்சம் வாக்குகள் கூட பெறவில்லை. ஆனால் இத்தொகுதி மக்கள் இரண்டேகால் லட்சம் வாக்குகள் அளித்தனர். பின்னர் 2004-ல் மக்கள் கூட்டணி அமைத்து போட்டியிட்டு 2 லட்சத்து 57 வாக்குகள் பெற்று தோல்வியுற்றேன். 2 தேர்தல்களில் என்னை எதிர்த்து திமுக கூட்டணியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் ஒருலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என சொல்லி வைத்து செயல்படுத்தினார் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். 2009-ல் திமுகவுடன் கூட்டணி சேர வாய்ப்பு ஏற்பட்டது. அப்போது ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில்  வெற்றி பெறுவார் என பன்னீர்செல்வம் தெரிவித்தார். அதேபோல் சுமார் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன்.

  பாஜக பொருந்தா கூட்டணி: பாஜக கூட்டணியில் உள்ள தேமுதிக, பாமக, பாஜக ஆகிய மூன்றும் நவக்கிரகங்களை போல் ஒன்றுக்கு, ஒன்று ஒரு திசையை பார்த்துக் கொண்டிருக்கிறது. அக்கூட்டணி் பொருந்தா கூட்டணி. வைகோ வேறு வழியில்லாமல் அக்கூட்டணியில் சேர்ந்துள்ளார். தேசிய கட்சிகள், திராவிட கட்சிகளுடன் கூட்டணி சேரமாட்டோம் என சொந்த சமூத்திடம் கூறிய ராமதாஸ், தேசிய கட்சியான பாஜக, திராவிட கட்சிகளான தேமுதிக, மதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளார். தனது மகன் மந்திரி பதிவாக்காக கூட்டணி வைத்து அச்சமுதாய மக்களை ஏமாற்றியுள்ளார். விஜயகாந்த், தனது மைத்துநர் சுதீஷ் உள்ளிட்ட வேட்பாளர்கள் அனைவரும் தோற்க வேண்டுமென்றெ பாஜக கூட்டணியில் சேர்ந்துள்ளார். ஏனென்றால் வெற்றி பெற்றால், 8 சட்டப்பேரவை உறுப்பினர்கள் அதிமுகவிற்கு சென்றது போல, பாஜக, காங்கிரஸ், திமுகவிற்கு போய்விடுவார்களோ என பயந்து பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளார். தமிழ்நாட்டில் வாக்கு வங்கியே இல்லாத கட்சியான பாஜக கூட்டணிக்கு தலைமை தாங்குகிறது.

  உமிஅரிசி கூட்டணி: பாஜக கூட்டணி உமிஅரிசி கூட்டணியாகும். மோடி மூவரையும் அரிசி எடுத்துவாங்க, நான் உமி தருகிறேன். ஊதி சாப்பிடலாம் என கூப்பிட்டார். ராமதாஸ் கால்படி அரிசியும், வைகோ கால் அரிசியும், விஜயகாந்த் அரைபடி அரிசியும் எடுத்துவந்து கொடுத்தனர். மோடி ஒரு படி உமியை கொடுத்து ஊதி, ஊதி சாப்பிடுவோம் எனக்கூறியுள்ளார். இதுதான் உமிஅரிசி கூட்டணி. திமுக கூட்டணி தழுவிய அளவில் மாபெரும் வெற்றி பெறும். அதற்கான சூழல் நிலவுகிறது. இந்திய மக்களுக்கு பெரும் ஆபத்து சூழ்ந்தள்ளது. இந்தியாவை பாதுகாக்க வேண்டுமென்ற என்ற சவாலை இந்த தேர்தல் எதிர்கொண்சுள்ளது. மதவாதசக்திகள் நாட்டை ஆள துடிக்கிறது. பாஜக வெற்றி பெற்றால் சிறுபான்மையின மக்கள், முஸ்லீம்கள், கிருஸ்துவர்கள், தலித் மக்கள் பாதிக்கப்படுவார்கள். சமூகநீதி கோட்பாடு, இடஒதுக்கீடு பாதிக்கப்படும். பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும், அரசியலமைப்பு சட்டம் மாற்றப்படும். இவ்வகையான ஆபத்து உள்ளது என திருமாவளவன் தெரிவித்தார்.

  கூட்டத்தில் தலைமைக்கழக பேச்சாளர் கீரை.வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தேர்தல் பொறுப்பாளர்கள் வன்னிஅரசு, மோ.எல்லாலின், கவிஞர் சேரன், நந்தன். திராவிடர்கழக மாவட்டத் தலைவர் அருண்ராஜ், மாவட்டச் செயலாளர் கண்ணன், நகரத் தலைவர் கோவி.குணசேகரன், நகரச் செயலாளர் சித்தார்த்தன், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட துணைத் தலைவர் முகமதுஇக்பால்ஸ நகரத் தலைவர் இஸ்மாயில், நகரச் செயலாளர் முகமதுஷபி, தமுமுக மாவட்ட பொருளாளர் சவுகத்அலிகான், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்க மாவட்ட இளைஞரணி செயலாளர் சிராஜூதின், நகரத் தலைவர் முகமதுபைசல், விவசாயத் தொழிலாளர் கட்சி மாவட்டத் தலைவர் கே.ஜி.சேகர், கட்டடத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் வேலு உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.

  கூட்டணி தர்மத்தை காப்பாற்ற திருமாவளவன் வேண்டுகோள்

  கூட்டத்தில் திருமாவளவன் பேசும்போது 'இந்த தொகுதி தோற்றால் பரவாயில்லை, அடுத்த தொகுதியில் வெற்றி பெற்று வடும் என கூட்டணி கட்சிகள் நினைக்கக்கூடாது. அப்படி நினைத்தால் ஒவ்வொரு தொகுதியிலும் நினைக்கும் நிலை வந்துவிடும். அதனால் பாதிப்பு கட்சி மற்றும் கூட்டணிக்கு ஏற்படும். விடுதலைச் சிறுத்தைகள் சிதம்பரம் தொகுதியில் மட்டும் பணியாற்றினால் போதாது. கடலூர் மற்றும் மயிலாடுதுறை தொகுதியிலும் பணியாற்ற வேண்டும். அந்த உணர்வை கூட்டணியில் உள்ளவர்கள் பெற வேண்டும். கூட்டணி வெற்றி பெற்றால்தான் சமூகநீதி பாதுகாக்கும் ஆட்சியை அமைக்க முடியும்' என தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai