Enable Javscript for better performance
என் ஆர். காங்கிரஸ் ஆட்சியால் புதுச்சேரியில் முன்னற்றமில்லை : ஜெயலலிதா- Dinamani

சுடச்சுட

    

    என் ஆர். காங்கிரஸ் ஆட்சியால் புதுச்சேரியில் முன்னற்றமில்லை : ஜெயலலிதா

    By dn  |   Published on : 27th March 2014 03:01 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    jaya

    என்ஆர் காங்கிரஸ் ஆட்சியால் புதுச்சேரியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. புதுச்சேரியில் அதிமுக அரசு அமைந்திருந்தால் பல்வேறு நலத்திட்டங்கள் கிடைத்திருக்கும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

    புதுச்சேரி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஓமலிங்கத்தை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்த ஜெயலலிதா, புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் ஆட்சியால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது.

    மீனவர் பிரச்னை, தமிழர்களின் பிரச்னைகளில் என்.ஆர். காங்கிரஸ் மௌனம் காத்துவிட்டது. மத்திய அரசின் தவறுகளை என்.ஆர். காங்கிரஸ் தட்டிக் கேட்கவில்லை.

    மக்கள்  விரோத ஆட்சியை தூக்கி எறிந்து விட்டு மக்களாட்சியை மலர செய்ய வேண்டும். தமிழர்களின் நலன் காக்கும் அரசு மத்தியில் அமைய வேண்டும்.

    பாதுகாப்புத் துறையை பாதுகாப்பற்ற துறையாக மத்திய அரசு மாற்றிவிட்டது என்று ஜெயலலிதா குற்றம்சாட்டினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai