Enable Javscript for better performance
ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்ட வழக்கு : வெள்ளியன்று இடைக்கால உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்ட வழக்கு : வெள்ளியன்று இடைக்கால உத்தரவு

    By dn  |   Published on : 27th March 2014 01:31 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    sc

    ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் நடந்த சூதாட்டம் குறித்து  விசாரணை நடத்தி வரும் உச்ச நீதிமன்றம், வெள்ளிக்கிழமை நாளை இடைக்கால உத்தரவு பிறப்பிப்பதாக தெரிவித்துள்ளது.

    சூதாட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அன்று இடைக்கால உத்தரவை பிறப்பிப்பதாகவும், நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை மற்றும் ராஜஸ்தான் கிரிக்கெட் அணிகள் பங்கேற்கக் கூடாது என்று பிசிசிஐக்கு பரிந்துரையும் செய்துள்ளது.

    மேலும், இந்தியா சிமெண்ட் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் பிசிசிஐயில் இடம்பெறக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது.

    முன்னதாக இன்றைய விசாரணையின் போது, ஐபிஎல் சூதாட்டம் குறித்து விசாரணை நடத்த அமைக்கப்பட்ட விசாரணை குழு தாக்கல் செய்த அறிக்கையின் படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிசிசிஐ விளக்கம் அளித்திருந்தது.

    அதாவது, சூதாட்ட விவகாரத்தில் முகுல் முக்தல் குழு பரிந்துரையின் படி குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையும், மேலும் விசாரணையையும் பிசிசிஐ எடுக்கும் என்று விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai