Enable Javscript for better performance
கணவருக்கு விஷம், கத்திக்குத்து மனைவி, காதலன் கைது- Dinamani

சுடச்சுட

    

    கணவருக்கு விஷம், கத்திக்குத்து மனைவி, காதலன் கைது

    By மேலூர்  |   Published on : 27th March 2014 09:20 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மேலூரில் கணவருக்கு சாப்பாட்டில் விஷம்வைத்தும் கத்தியால் குத்தியும் கொல்ல முயன்றதாகவும் மனைவியையும் அவரது காதலனையும் மேலூர் போலீஸார் வியாழக்கிழமை கைதுசெய்தனர்.

    மேலூர் சந்தைப்பேட்டை தெருவைச் சேர்ந்தவர் போஸ் (30) கூலித்தொழிலாளியான இவரது மனைவி சுப்புத்தாய் (22). இவர்களது வீட்டின் அருகில் வசிப்பவர் மோகன் (26). மதுரையில் ஒர்க்ஷôப்பில் மெக்கானிக்காக வேலைசெய்து வருகிறார்.

    புதன்கிழமை இரவு முகமூடியணிந்த நபர் போûஸ கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிவிட்டார். மேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

    இச்சம்வம்குறித்து மேலூர் போலீஸார் விசாரணை நடத்தினர். அதில் சுப்புத்தாயக்கும் மோகனுக்கும் தகாதஉறவு இருந்துவந்ததாம்.

    இதை போஸ் கண்டித்ததால் சாப்பாட்டில் ஏற்கெனவே விஷம் வைத்துள்ளனர். அதில் இறக்காததால் ஆத்திரமடைந்த மோகனும்,சுப்புத்தாயும் திட்டமிட்டு கத்தியால் குத்திக்கொலை செய்யத் திட்டமிட்டுள்ளனர் என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    இருவரையும் கைதுசெய்த போலீஸார் மேலூர் நீதித்துறை நடுவர்மன்றத்தில் ஆஜர்படுத்தினர். இருவரையும் 15 நாள் சிறை காவலில்வைக்க மேஜிஸ்திரேட் கே.வி.மகேந்திரபூபதி உத்தரவிட்டார்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai