Enable Javscript for better performance
கத்துக்குட்டி நெதர்லாந்திடம் போராடி வென்ற தென் ஆப்பிரிக்கா: 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி- Dinamani

சுடச்சுட

    

    கத்துக்குட்டி நெதர்லாந்திடம் போராடி வென்ற தென் ஆப்பிரிக்கா: 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

    Published on : 27th March 2014 06:30 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    south africa

    வங்க தேசத்தில் நடந்துவரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா-நெதர்லாந்து அணிகள் மோதின.

    டாஸ் வென்ற நெதர்லாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களம் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் அம்லா அதிரடியாக ஆடி 20 பந்துகளில் 43 ரன்கள் குவித்தார்.நெதர்லாந்து தரப்பில் ஜமில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதனை தொடர்ந்து 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நெதலாந்து அணி அதிரடியாக ஆடியது. தொடக்க வீரர் மைபார்க் 28 பந்துகளை சந்தித்து 51 ரன்கள் குவித்தார்

     நெதர்லாந்து அணி ஒரு சமயத்தில் 2 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்கள் என்ற வலுவான நிலையில் இருந்ததால் எளிதில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த தென் ஆப்பிரக்க வீரர்கள் விக்கெட்டுகளை வீழ்த்தி ரன்குவிப்பை தடுக்க முயற்சித்தனர்.

    இவர்கள் முயற்சிக்கு நல்ல பலன்கிடைத்தது. இம்ரான் தகீர் மற்றும் ஸ்டென் பந்துவீச்சில் அடுத்தடுத்து வந்த வீரர்கள் ஆட்டம் இழந்தனர். இதனையடுத்து நெதர்லாந்து அணி 139 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது தென் ஆப்பிரிக்க தரப்பில் சிறப்பாக பந்துவீசிய இம்ரான் தகீர் 4விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai