Enable Javscript for better performance
கனிமொழியை சந்தித்தார் அழகிரி - Dinamani

சுடச்சுட

    
    kani-azhagiri

    திமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள மு.க அழகிரி இன்று காலை அவரது சகோதரியும், திமுக மாநிலங்கள் அவை உறுப்பினருமான கனிமொழியை சென்னை சிஐடி காலனியில் உள்ள ராசாத்தி அம்மாள் வீட்டில் சந்தித்தார்.

    திமுகவில் இருந்து ஒதுக்கப்பட்ட அழகிரி மற்றும் ஆதரவாளர்கள் போல் கனிமொழியும் அவரது ஆதரவாளர்களுக்கு இந்த  தேர்தலில் இடம் அளிக்கப்படவில்லை என்ற சலசலப்பு இருந்து வருகிறது. ஸ்டாலின் கைகாட்டியவர்களுக்கு தேர்தலில் இடம் அளித்திருப்பதும் ஸ்டாலினுக்கே கட்சியில் அதிக முக்கியத்துவம் கொடுப்பதும் திமுகவில் பெரும்  பிரச்சனையை ஏற்படுத்தும் சூழல் உருவாகியுள்ளது.

    அநேகமாக இன்றைய அழகிரி - கனிமொழி சந்திப்பு ஸ்டாலினுக்கு எதிரான கூட்டணியை உருவாகும் திட்டமாக இருக்கலாம் என கூறப்படுகிறது... இருப்பினும் இருவரும் சந்தித்து பேசிய விவரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai