Enable Javscript for better performance
கள்ளழகர் திருக்கல்யாண விழா: ஏப்.10-ம் தேதி முதல் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    கள்ளழகர் திருக்கல்யாண விழா: ஏப்.10-ம் தேதி முதல் தொடக்கம்

    By dn  |   Published on : 27th March 2014 08:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    kallazhagar

    மதுரை அருகே உள்ள அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் திருக்கல்யாண திருவிழா ஏப்ரல் 10-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை நடைபெறுகிறது.

     மதுரை அருகே உள்ள அழகர்மலையில் உள்ளது அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில். இங்குள்ள அருள்மிகு சுந்தரராஜப் பெருமாளுக்கும்,  அருள்மிகு சிரீதேவி, பூதேவி மற்றும் சிரீ கல்யாணசுந்தரவள்ளித்தாயார் மற்றும் ஆண்டாள் நாச்சியாருக்கும் திருக்கல்யாணம் ஆண்டுதோறும் நடைபெறும்.

      ஏப்ரல் 10-ம் தேதி திருக்கல்யாணத் திருவிழா தொடங்குகிறது. காலை 10.30 மணிக்கு மேல் பகல் 11.15 மணிக்குள் சிறப்புப்பூஜைகள் நடைபெறும். சுவாமி, அம்பாள் எழுந்தருளி அருள்பாலிப்பர். பின்னர் மாலையில் திருக்கோயில் நாயக்கர் மண்டபத்தில் சுவாமி, அம்பாள் எழுந்தருள்வர்.

      ஏப்ரல் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் சுவாமி காலை, மாலையில் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். பின்னர் 14-ம் தேதி (ஞாயிறு) காலை நாயக்கர் மண்டபத்தில் சுவாமி எழுந்தருள்வார். அதன்பின்னர் சிரீதேவி, பூதேவி மற்றும் தாயார் உள்ளிட்ட பிராட்டியார்கள் எழுந்தருளிட பகல் 11. மணிக்கு மேல் 11.45 மணிக்குள் மிதுன லக்னத்தில் திருக்கல்யாணம் நடைபெறும். இரவு நான்கு பிராட்டிமாருடன் சப்பரத்தில் சுவாமி புறப்பாடாகி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலிப்பர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai