Enable Javscript for better performance
காகம் விழுந்த தண்ணீரால் துர்நாற்றம் வீசிய உணவு: விடுதி மாணவர்கள் வாக்குவாதம்- Dinamani

சுடச்சுட

    

    காகம் விழுந்த தண்ணீரால் துர்நாற்றம் வீசிய உணவு: விடுதி மாணவர்கள் வாக்குவாதம்

    By நாமக்கல்,  |   Published on : 27th March 2014 10:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காகம் விழுந்த தண்ணீரைக் கொண்டு சமைக்கப்பட்ட உணவு துர்நாற்றம் வீசியதால், அந்த உணவை சாப்பிட மறுத்து அரசு விடுதி மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    நாமக்கல் மோகனூர் சாலை லத்துவாடியில் அறிஞர் அண்ணா அரசுக் கலைக் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியைச் சேர்ந்த சுமார் 100 மாணவர்கள் கல்லூரிக்கு அருகே உள்ள ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் தங்கிப் படிக்கின்றனர். இந்த நிலையில், விடுதியில் புதன்கிழமை காலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு துர்நாற்றம் வீசியதாகக் கூறி, அந்த உணவை சாப்பிடாமல் மாணவர்கள் கீழே கொட்டினர். தொடர்ந்து, விடுதி மாணவர்கள் சோதித்ததில் உணவு சமைக்கப் பயன்படுத்திய தண்ணீரில்தான் துர்நாற்றம் வீசியது தெரிய வந்தது.

    இதையடுத்து, விடுதி தொட்டியைத் திறந்து பார்த்த போது அதில் காகம் ஒன்று இறந்து அழுகிய நிலையில் கிடந்தது தெரிய வந்தது. தொட்டியை ஊழியர்கள் சரிவரப் பராமரிக்காததால் காகம் இறந்து கிடப்பது குறித்து தெரியாமல் தொடர்ந்து அந்தத் தண்ணீரைப் பயன்படுத்தி உணவு சமைத்து வந்ததாக மாணவர்கள் கூறினர்.

    இந்தச் சம்பவத்தை அடுத்து விடுதி மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த மோகனூர் போலீஸôர், ஆதிதிராவிடர் நலத் துறை தனி வட்டாட்சியர் சகுந்தலா ஆகியோர் அந்தப் பகுதிக்கு விரைந்து சென்று மாணவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். இனிமேல் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காது என்று அவர்கள் கூறியதுடன் தினந்தோறும் குடிநீர் தொட்டியைக் கவனித்து தூய்மைப்படுத்திடவும் விடுதி ஊழியர்களுக்கு அறிவுறுத்தினர்.

    இதையடுத்து, மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். தொடர்ந்து, அனைத்து மாணவர்களுக்கும் சுத்தமான குடிநீரைக் கொண்டு உணவு தயார் செய்து அளிக்கப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai