Enable Javscript for better performance
காரைக்கால் துறைமுகத்தில் ஒரே எண்ணுடன் இரண்டு படகுகள்- Dinamani

சுடச்சுட

    

    காரைக்கால் துறைமுகத்தில் ஒரே எண்ணுடன் இரண்டு படகுகள்

    By காரைக்கால்,  |   Published on : 27th March 2014 08:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஒரே எண்ணில் 2 விசைப் படகுகள் காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தில் பயன்பாட்டில் இருந்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

    காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தில் 300-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் காரைக்கால் மீன்வளத் துறையில் பதிவு செய்யப்பட்டு இயக்கப்படுகிறது.

    காரைக்கால் மீன்வளத் துறை, கடலோரக் காவல் நிலையத்தினர் இணைந்து, காரைக்கால் படகு என்பதை தெளிவாக அறிந்துகொள்ளும் வகையில் ஒரே மாதிரியான நம்பர் பிளேட் பொருத்த ஏற்பாடு செய்தனர்.

    ஆனால், காரைக்காலில் பதிவு செய்யப்பட்ட படகுகளுடன், தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட படகுகளும் இத்துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இவையெல்லாம் மீன்வளத் துறையால் ஆய்வுக்குள்படுத்தப்படவில்லையென்ற புகார் கூறப்படுகிறது. இதனால் காரைக்காலை சேர்ந்த மீனவர்களுக்கு படகை கட்ட இடமில்லாமல் தவிக்கும் நிலையும் ஏற்படுகிறது. இதற்கிடையே காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தில் ஆறுமுகசாமி IND TN-06 MM 58, பிரேமாவதி IND TN-06 MM 58 என்று ஒரே எண்ணுடன் இரு படகுகள் இயக்கப்படுகின்றன. இதுகுறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டிய காரைக்கால் மீன்வளத்துறை அதிகாரிகள் கண்டும் காணாததுபோல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai