Enable Javscript for better performance
காரைக்கால் ஸ்ரீ பார்வதீஸ்வரசுவாமி கோயிலில் 7 நாள் சூரிய பூஜை தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    காரைக்கால் ஸ்ரீ பார்வதீஸ்வரசுவாமி கோயிலில் 7 நாள் சூரிய பூஜை தொடக்கம்

    By Selvamuthukkumarasamy  |   Published on : 27th March 2014 07:10 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

     காரைக்காலில் பிரசித்திப் பெற்ற சுயம்வர தபஸ்வினி சமேத ஸ்ரீ பார்வதீஸ்வரசுவாமி கோயிலில் 7 நாள் நடைபெறும் சூரிய பூஜை வியாழக்கிழமை தொடங்கியது.

    காரைக்காலில் உள்ள ஸ்ரீ சுயம்வர தபஸ்வினி ஸ்ரீ பார்வதீஸ்வரர் கோயில் மேற்குப்புற கோபுரம் கொண்டுள்ளது. மேற்குப்புற பார்வையில் சிவலிங்கம் அமைந்துள்ளது. பொதுவாக மேற்குப் புற. சிவதலம்  மிகுந்த சிறப்புக்குரியதென கூறப்படுகிறது. 

    திருஞானசம்பந்தரால் கி.பி. 6-ம் நூற்றாண்டில் பாடல்பெற்ற தலம். வேளாண்மை செழிப்புக்காக மழையில்லாத காலத்தில் கஷ்டப்பட்ட விவசாயிகளுக்காக மழைபெய்வித்து, தாமே உழவனாக வந்து தரிசனம் தந்தவர் சிவபெருமான என்ற பெயர் இக்கோயிலுக்கு உள்ளது. இக்கோயிலில் விதைத்தெளி உற்சவம் நடத்தப்படுகிறது.

    இவ்வகையில் மிகுந்த சிறப்புப் பெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும்  பங்குனி மாதம் 7 நாள்கள் மாலை வேளையில் சிவலிங்கத்தை சூரியன் வழிபடும் விதமாக சூரிய பூஜை நடைபெறுகிறது.

    இக்கோயிலில் இந்நிகழ்ச்சி வியாழக்கிழமை  மாலை 5 மணியளவில் தொடங்கியது. சிவலிங்கம் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சுமார் 5.50 மணியளவில் சூரியன் மறையும் நேரத்தில், சூரிய ஒளி, சிவலிங்கத்தின்மீது விழுந்தது. அப்போது சிறப்பு தீபராதனை நடைபெற்றது. சூரியன் வழிபாடு நடத்துவதாக ஐதீகம் கொண்டு பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.

    ஏப் 2-ம் தேதி வரை மாலை 5.30 மணியளவில் தினமும் சூரிய பூஜை இக்கோயில் நடைபெறுகிறது. முதல் நாள் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். கோயில் தனி அதிகாரி கோவி.ஆசைத்தம்பி ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai