Enable Javscript for better performance
கூட்டணிக்குள் பிரச்னை எதுவும் இல்லை: தொகுதிக்குள் உள்ள பிரச்னைகளை பேசித் தீர்த்துக் கொள்ளலாம்: விஜயகாந்த்- Dinamani

சுடச்சுட

    

    கூட்டணிக்குள் பிரச்னை எதுவும் இல்லை: தொகுதிக்குள் உள்ள பிரச்னைகளை பேசித் தீர்த்துக் கொள்ளலாம்: விஜயகாந்த்

    By ராஜவேல்  |   Published on : 27th March 2014 06:43 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கிடையே பிரச்னை ஏதும் இல்லை, கூட்டணியில் தொகுதிகளில் உள்ள பிரச்னைகளை பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்று கூறினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

    இன்று காஞ்சிபுரத்தில் தேஜகூட்டணியில் மதிமுக சார்பில்  போட்டியிடும் மல்லை சத்யாவுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டார் விஜயகாந்த். அப்போது, அவர், அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் மாறி மாறி வாக்களித்தது போதும், இந்த முறை உங்களது வாக்குகளை எங்களது கூட்டணி கட்சி வேட்பாளருக்கு தாருங்கள். தமிழகத்தில் நாங்கள் நல்லாட்சி தருவோம். மத்தியில் நரேந்திரமோடி நல்லாட்சி தருவார். ஆட்சி மாறியதும் உடனடியாக அனைத்து திட்டங்களையும் நிறைவேற்ற முடியாது. 2 ஆண்டுகளில் மக்கள் திட்டங்கள் நிறைவேற்றப்படும். 

    கூட்டணிக் கட்சி தலைவர்களுக்குள் எந்தப் பிரச்னையும் இல்லை. நாங்கள் ஒற்றுமையுடன் செயல்படுகிறோம். தொகுதிக்குள் சிறு, சிறு பிரச்னைகள் இருந்தால், பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று பேசினார் விஜயகாந்த். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai