Enable Javscript for better performance
கூறுகிறார் சிதம்பரம் : கறுப்புப் பணம் பதுக்கிய இந்தியர்களின் பட்டியலை தர சுவிஸ் மறுத்ததாம் - Dinamani

சுடச்சுட

    

    கூறுகிறார் சிதம்பரம் : கறுப்புப் பணம் பதுக்கிய இந்தியர்களின் பட்டியலை தர சுவிஸ் மறுத்ததாம்

    By dn  |   Published on : 27th March 2014 02:51 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Chidambaram540

    சுவிஸ்நாட்டு வங்கியிடம், கறுப்புப் பணம் பதுக்கிய இந்தியர்கள் பற்றிய பட்டியலை தாம் கோரியதாகவும், ஆனால், அந்த நாடு பட்டியலை அளிக்க மறுத்துவிட்டதாகவும் சிதம்பரம் தற்போது நாட்டு மக்களுக்கு தெரிவித்துக் கொண்டுள்ளார்.

    இது குறித்து அவர் கூறுகையில், கடந்த 2009ஆம் ஆண்டு, சுவிட்சர்லாந்து அரசிடம் கறுப்புப் பணம் பதுக்கியுள்ள இந்தியர்களின் விவரங்களை கேட்டு கடிதம் எழுதியதாகவும், அதனை ஏற்றுக் கொள்ளாத சுவிட்சர்லாந்து, இந்தியர்களின் பட்டியலை வெளியிட மறுத்ததோடு, இந்தியாவின் இரட்டை வரி விதிப்பு முறையை தங்கள் நாடு ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் பதில் அளித்ததாகத் தெரிவித்தார்.

    கறுப்புப் பணத்தை வெளியே கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுக்குத்தான் சிதம்பரம் இந்த பொறுப்பான பதிலை அளித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai