Enable Javscript for better performance
கேரள மாநிலத்தில் இருந்து சரிதா நாயர் வெளியேற தடை- Dinamani

சுடச்சுட

    

    கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த சரிதா நாயர் மீது, சோலார் மின் இயந்திரம் அமைப்பதில் மோசடி செய்ததாக எழுந்த புகாரின் பேரில் பல்வேறு வழக்குகள் பதிவானது.

    இந்த நிலையில், இவர் மீதான வழக்கு விசாரணை கோவை ஜூடிசியல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த போது, சரிதா நாயரும், அவரது கணவர் பிஜூ ராதாகிருஷ்ணனும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

    இதையடுத்து, சரிதா நாயர் தரப்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில்,  சரிதாநாயருக்கு ஜாமீன் வழங்கிய திருவனந்தபுரம் நீதிமன்றம், அவர் கேரள மாநிலத்தை விட்டு வெளியே செல்லக்கூடாது என நிபந்தனை விதித்து உள்ளது. எனவே அவரால் இன்றைய விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை என்று கூறப்பட்டது.

    மேலும், திருவனந்தபுரம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நகல் நீதிமமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை அடுத்த மாதம் 21–ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai