Enable Javscript for better performance
சிறிரங்கம் பகுதியில் நாளை மின்தடை- Dinamani

சுடச்சுட

    

    மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக சிறிரங்கம் பகுதியில் வெள்ளிக்கிழமை மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.

    இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக சிறிரங்கம் செயற்பொறியாளர் ரெங்கராஜ் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

    சிறிரங்கம் 110 கி.வோ.துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் வெள்ளிக்கிழமை (மார்ச் 28) மேற்கொள்ளப்பட உள்ளன.

    இதனால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் சிறிரங்கம் முழுவதும், மூலத்தோப்பு, மேலூர், வசந்தநகர், ஆர்.எஸ்.சாலை, பெரியார் நகர், திருவானைக்கா சோதனைச்சாவடி, அகிலாண்டேசுவரி நகர், சீனிவாசநகர், நெல்சன் சாலை, ராகவேந்திரா கார்டன், டிரங்க் சாலை, டி.வி. நல்லூர், திருவளர்சோலை, பனையபுரம், உத்தமர்சீலி, கிளிக்கூடு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai