Enable Javscript for better performance
சென்னையில் இன்று விஜயகாந்த் பிரசாரம்- Dinamani

சுடச்சுட

    
    vijayakant01

    தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னையில் வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொள்கிறார்.

    மார்ச் 14-ஆம் தேதி திருவள்ளூர் தொகுதி கும்மிடிப்பூண்டியில் பிரசாரத்தை தொடங்கிய அவர் தனது முதல் கட்ட பிரசாரத்தை தென் சென்னை தொகுதிக்குட்பட்ட திருவான்மியூரில் நிறைவு செய்கிறார்.

    வியாழக்கிழமை மாலை 3 மணிக்கு காஞ்சிபுரத்தில் பிரசாரத்தை தொடங்கும் அவர், அங்கு போட்டியிடும் மதிமுக வேட்பாளர் மல்லை சத்யாவை ஆதரித்து பேசுகிறார்.

    மாலை 5 மணிக்கு அண்ணா நகரில் மத்திய சென்னை தொகுதி தேமுதிக வேட்பாளர் ரவீந்திரனை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

    இரவு 7 மணிக்கு தென் சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் இல. கணேசனை ஆதரித்து திருவான்மியூர் மருந்தீசுவரர் கோயில் அருகே நடைபெறும் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் பேசுகிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai