Enable Javscript for better performance
செய்வீர்களா...? செய்வீர்களா...?  ஜெயலலிதாவைப் போல கேள்வி கேட்டு மு.க.ஸ்டாலின் பிரசாரம்- Dinamani

சுடச்சுட

    

    செய்வீர்களா...? செய்வீர்களா...?  ஜெயலலிதாவைப் போல கேள்வி கேட்டு மு.க.ஸ்டாலின் பிரசாரம்

    By  கும்மிடிப்பூண்டி,  |   Published on : 27th March 2014 08:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஜெயலலிதாவைப் போல "செய்வீர்களா...? செய்வீர்களா...?' என்று கேள்வி கேட்டு திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.
     திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, திருத்தணி, பொன்னேரி, ஊத்துக்கோட்டைப் பகுதிகளில் திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது, அவர்
     பேசியது:
     திமுக தலைவர் மு.கருணாநிதி சுட்டிக் காட்டும் நபரே அடுத்த பிரதமர் என்ற நிலையை உருவாக்கும் வகையில் மக்களின் எழுச்சியைக் காண முடிகிறது.
     தமிழக முதல்வர் ஜெயலலிதாவைப் போல தேர்தலின்போது மட்டும் மக்களைத் தேடி வருபவர் கருணாநிதி அல்ல. அதுவும் தமிழக முதல்வர் ஹெலிகாப்டரில் பறந்து வந்து மக்களை சந்திக்கிறார். சாலை வழியாக பயணித்தால் அவரது ஆட்சியில் சாலைகளின் நிலைமை பற்றித் தெரியும்.
     தமிழக முதல்வர் பிரசாரக் கூட்டங்களில் கேட்பது போல நானும் கேட்கிறேன், தமிழகத்தில் நடைபெறும் மோசமான ஆட்சிக்கு பாடம் புகட்டும் வகையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமாரை வெற்றி பெற செய்வீர்களா...? என்றார். உடனே கூட்டத்தில் இருந்தவர்கள் "செய்வோம்' என்று கத்தினர்.
     நான் ஆட்சிக்கு வந்தால் தடையற்ற மின்தடை வரும் என்று சொல்லி ஒரு நாளைக்கு 10 மணி நேரத்துக்குமேல் மின்தடையை செய்யும் அதிமுக அரசுக்கு பாடம் புகட்டும் வகையில் ரவிக்குமாரை வெற்றி பெற செய்வீர்களா...? என்று மீண்டும் ஸ்டாலின் கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் செய்வோம் என்று கத்தினர்.
     ரவிக்குமாரை வெற்றி பெற செய்வீர்களா?, வெற்றி பெற செய்வீர்களா? என மீண்டும் மீண்டும் மு.க.ஸ்டாலின் கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் "செய்வோம், செய்வோம்' என்று கூறினர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai