Enable Javscript for better performance
சேலத்தில் இன்று ரயில்வே சார்பில் பாதுகாப்பு விழிப்புணர்வு ரத பிரசாரம்- Dinamani

சுடச்சுட

    

    சேலத்தில் இன்று ரயில்வே சார்பில் பாதுகாப்பு விழிப்புணர்வு ரத பிரசாரம்

    By க.தங்கராஜா.  |   Published on : 27th March 2014 07:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு விழிப்புணர்வு ரத பிரசாரம் வியாழக்கிழமை (மார்ச் 27) தொடங்கப்படுகிறது.

     காலை 9 மணியளவில் கோட்ட மேலாளர் சுப்ரான்ஷூவால் கொடியசைத்துத் தொடங்கி வைக்கப்பட உள்ள இந்த பாதுகாப்பு விழிப்புணர்வு ரத பிரசாரம், மேட்டூர், மொரப்பூர், மாவேலிப்பாளையம், தொட்டிபாளையம், சூலூர் ரயில் நிலையங்களுக்கு இடையிலான கிராமங்களிலும் இரு நாள்கள் நடைபெறுகிறது.

     உயர் அழுத்த மின்சார வயர்கள் செல்லும் இடங்களிலும், ரயில்வே மின்சாதனப் பொருள்கள் இருக்கும் இடங்களிலும் பயணிகள், பொதுமக்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருந்து உயிரைக் காத்துக் கொள்வது என்பது குறித்து இந்த பிரசாரத்தில் விளக்கப்பட உள்ளதாக ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai