Enable Javscript for better performance
சோனியா காந்தி மனசாட்சியற்றவர்: மோடி கடும் தாக்கு- Dinamani

சுடச்சுட

    
    modi in behar

    பீகார் மாநிலம் சஷாராம் பகுதியில் பாஜக சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார்.

    அபபோது பேசிய அவர், இந்த தொகுதியில் இருந்து மீராக்குமாரை (மக்களவை சபாநாயகர்) தேர்ந்தெடுத்தீர்கள். அவர் உங்கள் பகுதிக்கு என்ன வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். எந்த வளர்ச்சியும்ஏற்படவில்லை. அவரது தநதையின்(பாபு ஜெகஜீவன்) கனவை நிறைவேற்றிய அவர் விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இதனால் விவசாயிகள் உணவின்றி தவிக்கின்றனர்.

     சோனியா மனசாட்சியற்றவர். தேர்தல் வந்தால் மட்டுமே ஏழைகளை நினைத்து பார்க்கின்றார். வீணாகும் தானியங்களை விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கண்டிப்பையும் பொருட்படுத்தாத தில்லி காங்கிரஸ் அரசு, மதுபான ஆலைகளுக்கு தானியங்களை கொடுத்தது. இதனால் விவசாயிகள் உணவின்றி தவிக்கின்றனர். உணவு தானியங்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு சாப்பிட உணவில்லை;

    மதுவால் அவர்கள் வாழ்க்கை சீரழிந்து போகிறது; பீகார் வளர்ச்சி பெறாமல் இந்தியா வளர்ச்சி அடையாது; குஜராத்தில் 2 நிமிடம் மின்சாரம் இல்லை என்றால் தான் அது செய்தி; ஆனால் பீகாரில் மின்சாரம் இருந்தால் தான் அது செய்தி; இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் மின்சார வசதி பெற வேண்டும். இவ்வாறு மோடி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai