Enable Javscript for better performance
ஜப்பான் ஆரம்ப பள்ளி அதிரடி உத்தரவு: மாணவர்கள் 9 மணிக்கு மேல் செல்போன் பயன்படுத்த தடை- Dinamani

சுடச்சுட

    

    ஜப்பான் ஆரம்ப பள்ளி அதிரடி உத்தரவு: மாணவர்கள் 9 மணிக்கு மேல் செல்போன் பயன்படுத்த தடை

    Published on : 27th March 2014 03:21 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    jappan

    ஜப்பானில் ஆரம்ப பள்ளி மாணவர்கள் செல்போனில் கேம் விளையாடுவதால் அவர்களால் படிப்பில் கவனம் செலுத்த முடிவதில்லை என்று பெற்றோர்கள் புகார் கூறி வந்தனர்..இதற்கு முடிவு கட்ட நினைத்த ஆரம்ப பள்ளி ஒன்று மாணவர்கள் இரவு 9 மணிக்கு மேல் செல்போன் பயன்படுத்த தடைவிதித்துள்ளது.

    ஜப்பானில் கரியா என்ற நகரில் உள்ள ஆரம்ப பள்ளியில் 13 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர்.  இவர்கள் அனைவரும இரவு 9 மணிக்குள் தங்கள் பெற்றோரிடம் செல்போனை ஒப்படைத்து விட வேண்டும் என்று அந்த பள்ளி உத்தரவிட்டுள்ளது.. மேலும் இந்த உத்தரவு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இதுகுறித்து ஆரம்ப பள்ளி முதல்வர் புஷிடோஷி ஒகாஷி இது பற்றி பேசுகையில். மாணவர்கள்  செல்போனை மாலையிலேயே தங்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பல பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிகையை ஏற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் மாணவர்கள் பள்ளி உத்தரவிற்கு பயந்து செல்போனில் கேம் விளையாடுவதை குறைத்து கொள்வார்கள் என தெரிவித்தார். அதே நேரத்தில் இந்த உத்தரவை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்பதில்லை. மாணவர்களின் பெற்றோரே இது குறித்து முடிவு எடுக்கலாம் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai