Enable Javscript for better performance
டி-20: இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து அணி  - Dinamani

சுடச்சுட

    
    england_srilanka

    வங்கதேசத்தின் சிட்டகாங்கில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியில் இன்று நடைபெற்ற இலங்கை- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில், இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

    டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, முதலில் பந்து வீசத் தீர்மானித்தது. இதன்படி, இலங்கை அணி பேட்டிங் செய்யக் களம் இறங்கியது.

    இலங்கை அணியில் துவக்க வீரர் தில்ஷன் 47 பந்துகளில் 55 ரன் எடுத்தார். இதில் 2 சிக்ஸர் அடங்கும். பெரேரா 3 ரன்களில் ஆட்டம் இழந்தாலும், பின்னர் வந்த ஜெயவர்த்தனே அடித்து ஆடினார். அவர் 51 பந்துகளில் 89 ரன் குவித்தார்.இதில் 3 சிக்ஸர், 11 பவுண்டரிகள் அடங்கும். பின்னர் வந்த மேத்திவ்ஸும், என்.பெரேராவும் அதிரடியாக ஆட இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழந்து 189 ரன் எடுத்து, 190 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இங்கிலாந்துக்கு நிர்ணயித்தது.

    பின்னர் களம் இறங்கிய இங்கிலாந்து அணி, துவக்கத்திலேயே சரிவு கண்டது. ரன் ஏதும் எடுக்காத நிலையில், லம்ப், எம்.அலி இருவரும் ஆட்டம் இழக்க, அந்த அணி சற்றே தடுமாறியது. ஆனால் பின்னர் வந்த மோர்கனும், ஹேல்ஸும் அதிரடியாக ஆட, இருவரும்  இணைந்து 3வது விக்கெட்டுக்கு 152 ரன் எடுத்து சாதனை படைத்தனர். மோர்கனைத் தொடர்ந்து பட்லர் ஆட்டமிழக்க, போபராவும் ஹேல்ஸும் அதிரடி காட்டினர். கடைசிக் கட்டத்தில் சூப்பர் சிக்ஸர் அடித்து சதத்தை நிறைவு செய்தார் ஹேல்ஸ். அதைத் தொடர்ந்து இமாலய சிக்ஸர் அடித்து வெற்றிக்கு வித்திட்டார். அவர் 64 பந்துகளில் 116 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவர் 6 சிக்ஸர்,11 பவுண்டரி அடித்து அசத்தினார்.

    இறுதியில் 19.2 ஓவர்களில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 190 ரன் குவித்து அபார வெற்றி பெற்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai