Enable Javscript for better performance
தருமபுரிக்கு படையெடுக்கும் திரை நட்சத்திரங்கள்!- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரிக்கு படையெடுக்கும் திரை நட்சத்திரங்கள்!

    By தருமபுரி,  |   Published on : 27th March 2014 09:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அதிமுக வேட்பாளர் பி.எஸ்.மோகனை ஆதரித்து வாக்கு சேகரிக்க திரைப்பட நட்சத்திரங்கள் தருமபுரிக்கு வர உள்ளனர்.

    இதுகுறித்து அதிமுக மாவட்டச் செயலாளர் கே.பி.அன்பழகன் கூறியது:

    தருமபுரி மக்களவைத் தொகுதியில் பிரசார பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இதில் தமிழக முதல்வரின் மக்கள் நலத் திட்டங்கள் குறித்து எடுத்து கூறி வாக்கு சேகரித்து வருகிறோம்.

    தருமபுரி மக்களவைத் தொகுதியில் திரைப்பட நட்சத்திரங்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட வருகை தர உள்ளனர். இதில், மார்ச் 30 திரைப்பட நடிகர் ராமராஜன் அரூர் பகுதியில் வாக்கு சேகரிக்க உள்ளார். 31-ஆம் தேதி நடிகை விந்தியா பென்னாகரம் பகுதியிலும், நகைச்சுவை நடிகர் பாலு ஆனந்த், இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பிரசாரம் செய்ய உள்ளனர்.

    அதேபோல, ஏப்ரல் 2-ஆம் தேதி நகைச்சுவை நடிகர்கள் செந்தில், சிங்கமுத்து ஆகியோர் காரிமங்கலம் பகுதியிலும், ஏப்ரல் 5-இல் நடிகர் பொன்னம்பலம் பாலக்கோடு பகுதியிலும், அதே தேதியில் நடிகர்கள் ஏ.கே.ராஜேந்திரன், ஜெயசூர்யா ஆனந்த் பென்னாகரம் பகுதியிலும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளனர்.

    தலைவர்கள் வருகை: தருமபுரி மக்களவைத் தொகுதியில் பிரசாரம் அதிமுக தலைமை கழகத்திலிருந்து தலைவர்கள் வருகை தர உள்ளனர். இதில், மார்ச் 31-ஆம் தேதி பரிதி இளம்வழுதி கடத்தூர் பொதுக் கூட்டத்திலும், ஏப்ரல் 4-ஆம் தேதி பண்ருட்டி ராமச்சந்திரன் பென்னாகரம், பாலக்கோடு மற்றும் ஏப்ரல் 5-ஆம் தேதி மேட்டூர் ஆகிய இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பிரசாரம் செய்ய உள்ளனர் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai